காஞ்சீபுரம் பட்டு சேலைகள் ரூ.107 கோடிக்கு விற்பனை செய்து சாதனை அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் பட்டு சேலைகள் ரூ.107 கோடிக்கு விற்பனை செய்து சாதனை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கைத்தறித்துறை துணை இயக்குனர் பெரியசாமி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

காஞ்சீபுரம்,

தமிழக அரசின் கைத்தறித்துறை மூலம் காஞ்சீபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2016–17–ஆம் ஆண்டில் ரூ.72 கோடிக்கு பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.107 கோடி பட்டு சேலைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் பட்டு நெசவாளர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. காஞ்சீபுரத்தில் கைத்தறித்துறை சார்பில் சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 2017–2018–ம் ஆண்டு ரூ.1 கோடிக்கு பல்வேறு கைத்தறி பட்டு சேலைகள், லுங்கிகள், பட்டு வேட்டிகள், பெட்சீட், துண்டுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.91 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இலக்கு எட்டப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story