நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள தனியார் பார்களை மூட வேண்டும் கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு


நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள தனியார் பார்களை மூட வேண்டும் கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பார்களை மூட வேண்டும், கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

கோவை,

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைபொதுச்செயலாளர் தங்கவேல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அ‌ஷரப்அலி, முகமதுஅலி ஆகியோர் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கோவையில் மத்திய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கோவை ரெயில் நிலையம் எதிரில், கலெக்டர் அலுவலகம் எதிரில், காந்திபுரம் வெளியூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள இடங் களில் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் தனியார் மதுபார்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தீர்ப்பின்படி, மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள தனியார் மதுபார்களை உடனடியாக மூட வேண்டும். மூடப்பட்ட பழைய இடத்தில் இருந்த அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடைகளையும் மீண்டும் திறக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story