வையம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


வையம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:45 AM IST (Updated: 10 Aug 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரமணி தலைமையிலான நிர்வாகிகள் நேற்று காலை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரமணி தலைமையிலான நிர்வாகிகள் நேற்று காலை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மீண்டும் பணி வழங்கிட வேண்டும், பணி நாட்களை அதிகப்படுத்தி உடனடியாக வேலையை தொடங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, அங்கு வந்த வையம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி மற்றும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story