மரபணு மாற்று விதைகளை தடை செய்யக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மரபணு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும், பன்னாட்டு விதை கம்பெனிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
உள்நாட்டு விதைகளை அழிக்கும் மரபணு மாற்ற விதைகளை தடை செய்ய வேண்டும், இந்தியாவில் இருந்து பன்னாட்டு விதை கம்பெனிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு தினமான நேற்று மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூரில் தலைமை தபால் அலுவலகம் அருகில் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார். நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் நிஜாமுதீன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பால்கி, அருள்செல்வம், சரவணன், வைத்தி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story