காணொலி காட்சி மூலம் கடலூர் கலெக்டரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி கூட்ட அரங்கில் பிரதமர் மோடி கலெக்டர் ராஜேசுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி கூட்ட அரங்கில் பிரதமர் மோடி கலெக்டர் ராஜேசுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் வருவாய்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற 2022–ம் ஆண்டுடன் 75–வது ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து புதிய இந்தியா என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரதமர்மோடி அரசு செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடினார். அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story