கட்டிடங்களின் உரிமங்களை புதுப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்


கட்டிடங்களின் உரிமங்களை புதுப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:15 AM IST (Updated: 10 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கட்டிடங்களின் உரிமங்களை புதுப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் 100 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குறையாத தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பள்ளிகள், பிற கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், விடுதிகள், சினிமா தியேட்டர்கள், நூலகங்கள், கிளப், சத்திரங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமம் சட்டத்தின்படி உரிமம் பெறவேண்டும். கட்டிட உரிமையாளர்கள், குத்தகைதாரர், மேலாளர், செயலர், முதல்வர், ஒப்பந்ததாரர் மற்றும் கட்டிடங்களுக்கு பொறுப்புள்ளவர்கள் பொது கட்டிட உரிமம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுவரை உரிமம் பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களை அணுகி பொதுக் கட்டிடங்கள் உரிமம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட உறுதி சான்று, பொது சுகாதாரச் சான்று, உள்ளாட்சி அமைப்பு மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற துறைகளிடம் பெறப்பட்ட கட்டிட வரைபடம், உரிம கட்டிடம், தீயணைப்புத்துறையினரின் தடையில்லா சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, விண்ணப்பித்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்படி உரிமத்தை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பொதுக் கட்டிட உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story