அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 90 அங்கன்வாடி பணியாளர்கள், 83 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 234 உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 3–ம் தேதி முதல் 17–ம் தேதி மதியம் 12–மணி வரை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவற்றில் விண்ணப்பிக்கும் நபர் குடும்பத்தினர் அரசு வேலையில் இல்லை" என சான்றளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியரிடம் இச்சான்று பெற வேண்டியுள்ளதால் காலதாமதமாவது அறியப்பட்டது. ஆகவே வட்டாட்சியரிடம் சான்று பெறாமல் விண்ணப்பதாரர்கள் சுயசான்றொப்பம் (அவரவரே எழுதிக்கொடுத்து) விண்ணப்பித்தால் போதுமானது.
நேர்முகத் தேர்வுக்குப் பின்பு விண்ணப்பதாரர் தவறாக சுயசான்றொப்பம் கொடுத்திருப்பது அறியப்பட்டால் அவர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.