41 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விசைபடகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்


41 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விசைபடகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

41 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் மீனவ கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 7–ந்தேதி கடலுக்கு மீன்பிடி சென்றனர். அப்போது எல்லையை தாண்டி மீன்பிடித்தாக 41 மீனவர்களையும், 10 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதனால் கடலோர பகுதிகளில் இரண்டு நாட்களாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மீன்பிடி தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 41 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து நேற்று ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மீனவ கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்பிடிதளங்களில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story