மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி பலி


மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி பலி
x
தினத்தந்தி 10 Aug 2017 4:45 AM IST (Updated: 10 Aug 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி இறந்து போனாள்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டி குறவர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, பெயிண்டர். இவருடைய 2-வது மகள் நயன்தாரா (வயது 12). வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாள். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவி பரிதாபமாக இறந்து போனாள். மாணவியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்தபிறகே மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததா? என தெரியவரும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவி மர்ம காய்ச்சலால் இறந்ததையொட்டி ரெட்டையாம்பட்டி பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story