மாவட்டத்தில் காலியாக உள்ள 809 அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 809 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவி யாளர் என 809 காலி பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் தகுதியான பெண் கள் நிரப்பப்பட உள்ளனர்.
முதன்மை அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி மைய பணி யாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப் பகுதியில் உள்ள பணி யிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதே கிராமத்தில் வசிப்பவர் களாக இருக்க வேண்டும். உள்ளூரில் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் மையம் அமைந்துள்ள அதே ஊராட்சியை சேர்ந்த அருகாமையில் உள்ள பிற கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதேபோல நகராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதே வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் இல்லாத பட்சத்தில் அதே வார்டுக்கு அருகாமையில் உள்ள வார்டில் வசிப்பவர் களாக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத் துடன் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றிற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். இருப்பிடத்திற்கு ரேஷன்கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வரி ரசீது நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிணை இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 21-ந் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை மற் றும் அரசு விடுமுறை நீங்கலாக) அந்தந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத் தில் வழங்கலாம்.
வரப்பெறும் விண்ணப்பங் கள் அனைத்தும் வயது, கல்வி தகுதி, இனசுழற்சி போன்ற தகுதிகளை பரீசிலித்து அதற்கு பின் தகுதிஉள்ள விண்ணப் பங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story