புத்திகே மடத்தில் ராகவேந்திரசாமி ஆராதனை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புத்திகே மடத்தில் ராகவேந்திரசாமி ஆராதனை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி புத்திகே மடத்தில் நடந்த ராகவேந்திரசாமி ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி விருபாட்சிபுரத்தில் உள்ள புத்திகே மடத்தில் ராகவேந்திரசாமி 346-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. பின்னர் கோபூஜை, சத்தியநாராயணசாமி பூஜை, ராகவேந்திர சாமிக்கு பூர்வ ஆராதனை ஆகியவை நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று மத்ய ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி ராகவேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கனக பூஜையும் நடத்தப்பட்டன. பின்னர் சாமி தேரோட்டம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இன்று(வியாழக்கிழமை) உத்ர ஆராதனையும், நாளை (வெள்ளிக்கிழமை) கணபதி ஹோமம், சங்கடஹர சதுர்த்தி விழா மற்றும் சுக்ஞானேந்திர தீர்த்த ஆராதனையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர். 

Related Tags :
Next Story