மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு முதல்–மந்திரி உறுதி
மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு கடமைப்பட்டிருப்பதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
பைகுல்லா ராணி பார்க்கில் தொடங்கிய இந்த அமைதி பேரணி, ஆசாத் மைதானத்தில் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து, மராத்தா சமுதாய பிரதிநிதிகள் சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட அவர், மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க தன்னுடைய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில பிற்படுத்தப்பட்ட கமிஷனுக்கு உத்தரவிட்டார்.கோபர்டி சிறுமி கற்பழிப்பு வழக்கு பற்றி கூறிய அவர், இந்த வழக்கு விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று குறிப்பிட்டார்.
பின்னர், மராத்தா சமுதாய இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து சட்டசபையில் பேசிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஒவ்வொரு மாவட்டத்திலும் மராத்தா சமுதாய மாணவர்களுக்காக விடுதி கட்ட நிலமும், ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இணையான கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகளை மராத்தா சமுதாய மாணவர்களும் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story