ஹிரோஷிமா– நாகசாகி அணுகுண்டு பேரழிவு நினைவு நாளையொட்டி உலக மக்கள் அமைதி போராட்டம்


ஹிரோஷிமா– நாகசாகி அணுகுண்டு பேரழிவு நினைவு நாளையொட்டி உலக மக்கள் அமைதி போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:43 AM IST (Updated: 10 Aug 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஹிரோஷிமா– நாகசாகி அணுகுண்டு பேரழிவு நினைவு நாளையொட்டி தஞ்சையில் உலக மக்கள் அமைதியை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

ஹிரோஷிமா– நாகசாகி அணுகுண்டு மனித பேரழிவின் நினைவு நாளையொட்டி தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் உலக மக்களின் அமைதியை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் தஞ்சையில் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழக தலைவர் தஞ்சை ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அணுஆயுத பேரழிவை சர்வதேச மற்றும் இந்திய நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அணுமின் நிலையம் உள்ளிட்ட அழிவுத்திட்டங்களை கைவிட வேண்டும். மண்ணை மலடாக்கும் விவசாயத்தை அழிக்கின்ற மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது. நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலத்தை கைவிட வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாட்ட செயலாளர் தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. சங்க பொருளாளர் சுந்தரபாண்டியன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் அப்பாதுரை, கட்டுமான சங்கம் செல்வம், விளிம்புநிலை மக்கள் இயக்க நிறுவனர் முத்துமாரியப்பன், பேராசிரியர் பாரி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story