கடன் தொல்லை காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை


கடன் தொல்லை காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2017 4:01 AM IST (Updated: 10 Aug 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லை காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்தவர் தயாளன் (வயது 47). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன்–மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவருடைய மனைவி, தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தயாளன் நேற்று இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தயாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொலை காரணமாக தயாளன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புதுவையில் கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் தயாளன், சபாநாயகர் வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story