என்ஜினீயரிங் படிப்புக்கு 2-வது நாளாக சென்டாக் கலந்தாய்வு


என்ஜினீயரிங் படிப்புக்கு 2-வது நாளாக சென்டாக் கலந்தாய்வு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:31 AM IST (Updated: 10 Aug 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. புதுவையில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும், 16 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் உள்ளன.

புதுச்சேரி,

இந்த கல்லூரிகளில் உள்ள மொத்தம் 4 ஆயிரத்து 191 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொள்ள 888 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 541 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் 511 மாணவர்கள் விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கான சேர்க்கை ஆணைகளை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வழங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சென்டாக் கலந்தாய்வு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 925 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். வருகிற 12-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

Next Story