வித்தியாசமான சாலைகள்
கார் ஓட்டுவது, பைக் பழகுவது, ஸ்கேட்டிங் செய்வது என, சாலைகளில் நடைபெறும் அத்தனை சாகசங்களையும், இந்த மாடி சாலைகளில் செய்து அசத்துகிறார்கள்.
சீனாவின் சாங்குயிங் பகுதியில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கட்டிடம், அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவருகிறது. ஏனெனில் அதன் மொட்டை மாடியில் தார் சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், அதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.
கார் ஓட்டுவது, பைக் பழகுவது, ஸ்கேட்டிங் செய்வது என, சாலைகளில் நடைபெறும் அத்தனை சாகசங்களையும், இந்த மாடி சாலைகளில் செய்து அசத்துகிறார்கள். இதை மாதிரியாக கொண்டு வருங்காலத்தில் மேல்தள சாலை களையும் உருவாக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது அடுக்குமாடி கட்டிடங்களின் மேல்தளங்களை, பாலங்களின் மூலம் இணைத்து நீண்ட மேல்தள சாலைகளையும் உருவாக்க இருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது, சீன அரசாங்கம்.
Related Tags :
Next Story