திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
ஆவணி திருவிழாதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா, கடந்த 1–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம்விழாவின் சிகர நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 8.10 மணி அளவில் கோவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது.
அம்மன் வீதி உலாமாலையில் அம்மன் கோவிலில் இருந்து எழுந்தருளி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டபத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். இரவில் சண்முகவிலாச மண்டபத்தில் அம்மன் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சண்முகருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.