நெல்லை மாவட்டத்தில் *உணவு பாதுகாப்பு குறித்து ‘‘வாட்ஸ்அப்’’பில் புகார் அளிக்கலாம் கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு குறித்து, ‘‘வாட்ஸ் அப்’’பில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு குறித்து, ‘‘வாட்ஸ் அப்’’பில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
உணவு பாதுகாப்பு கூட்டம்உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவுப்படி நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு காலாண்டு வழிகாட்டுதல் கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் பொற்செல்வன், வணிகர் சங்க நிர்வாகிகள் சின்னத்துரை, எம்.ஆர்.சுப்பிரமணியன், மணிகண்டன், நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு வெங்கடாசலம் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில் கூறியதாவது:–
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வியாபாரிகளும், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு விற்பனை உடையவர்கள் மாநில உரிமம் பெற்றும், ரூ.12 லட்சத்துக்கு கீழ் விற்பனை உள்ளவர்கள் பதிவு சான்று பெற்றும் தொழில் நடத்த வேண்டும். மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும், மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களில் அனுமதி பெற்று பயன்படுத்தவும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உணவு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
‘‘வாட்ஸ் அப்’’மேலும் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்ய, ஒவ்வொரு மாதமும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம், உணவு மாதிரிகள் எடுத்து அனுப்ப வேண்டும்.
உணவு பாதுகாப்பு சம்பந்தமான புகார்களுக்கு 9444042322 என்ற ‘‘வாட்ஸ்அப்’’ மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
இந்த தகவலை உணவு பாதுகாப்புத்துறை நெல்லை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.