நெல்லை பேட்டையில் போலி டாக்டர் கைது
நெல்லை பேட்டையில் போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை பேட்டையில் போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
களப்பணியாளர்கள் ஆய்வு
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
நெல்லையை அடுத்த பேட்டை ரகுமான்பேட்டை ஆர்.பி.சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு களப்பணியாளர்கள் சென்றபோது எல்லாம் அந்த வீடு பூட்டிக்கிடந்து உள்ளது. ஒருநாள் வீடு திறந்திருந்தபோதிலும் அங்கிருந்தவர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நேற்றும் களப்பணியாளர்கள் அந்த வீட்டுக்கு சென்றபோது, அவர்களை அங்கிருந்தவர் திட்டி அனுப்பி விட்டார்.
போலி டாக்டர் பிடிபட்டார்
இதனால் சந்தேகம் அடைந்த களப்பணியாளர்கள் இதுகுறித்து மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜானகிராம் அந்தோணி, பெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பீர் தவுசியுடன் அந்த வீட்டுக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் வீட்டில் இருந்த நபர் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூர் அருகே உள்ள சாணார்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 50) என்ற ஷேக் முகமது என்பதும், போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. 5–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் சித்த மருத்துவ படிப்பு (பி.எஸ், எம்.எஸ்.) படித்து உள்ளதாக கூறி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்து உள்ளது.
திடுக்கிடும் தகவல்கள்
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
சந்திரபோஸ் பேட்டையில் வீடு எடுத்து தங்கியிருந்து கிளினிக் நடத்தி வந்து உள்ளார். அவர் அலோபதி, ஓமியோபதி, சித்த மருத்துவம் என்று அனைத்துவித மருத்துவமும் செய்து உள்ளார். குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கும் மருந்து கொடுத்து உள்ளார். களக்காடு, சேர்மாதேவி, முக்கூடல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்து உள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக அவர் அங்கு கிளினிக் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அங்கிருந்த மருந்துகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் சந்திரபோசை பேட்டை போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.75 ஆயிரம் அபராதம்
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன் கூறுகையில், ‘மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய 280 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் ஆய்வின்போது தற்போது போலி டாக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார். வீடுகளில் கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்மூலம் டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்கலாம்’ என்றார்.

Related Tags :
Next Story