புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி அரசு கலை கல்லூரி மாணவ–மாணவிகள் தர்ணா
நாகர்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகர்கோவில் வடசேரி நெசவாளர் காலனியில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ–மாணவிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. கல்லூரிக்கென சொந்தமாக கட்டிடம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக மாணவ–மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதனால் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு கோணத்தில் ரூ.7½ கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும் என்று முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டது.
இதனையடுத்து கல்லூரிக்கான புதிய கட்டிட திறப்பு விழா 10–ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்றும், மாணவ–மாணவிகளை புதிய கட்டிடத்துக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டிடத்துக்கு செல்ல இருந்ததால் மாணவ–மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெறவில்லை. இதனால் மாணவ–மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து மாணவ–மாணவிகள் அனைவரும் கோணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு கல்லூரி நிர்வாகத்தினர் அங்கு வந்து, புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்ட மாணவ–மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story