கடலூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை
கடலூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் அருகே உள்ள சின்னாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கருணாநிதி(வயது 43). இவர் புதுச்சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கருணாநிதி வழக்கம்போல் டாஸ்மாக் கடைக்கு சென்றார். உடன் விற்பனையாளர்கள் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த அந்தோணிசாமி, நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், அக்கியா நல்லூரை சேர்ந்த முருகானந்தம், கடலூரை சேர்ந்த சீனிவாசன், சகாதேவன் ஆகியோரும் பணியில் இருந்தனர்.பின்னர் இரவு 10 மணி அளவில் வேலை முடிந்ததும் கருணாநிதி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கடையில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் அன்றைக்கு வசூலான ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 250-ஐ ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டார்.
சிலம்பிமங்கலம் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களில் ஒருவன் திடீரென கருணாநிதியின் சட்டையைப்பிடித்து இழுத்தான். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களால் கருணாநிதியை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.
மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கருணா நிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கருணாநிதி புதுச்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் மேற்பார்வையாளர் கருணாநிதி தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மாநில டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எந்தவித செலவினமும் இல்லாமல் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கண்டனத்துக்குரியதாகும்.
சென்னையை போன்று டாஸ்மாக் கடைகளில் வசூல் ஆகும் பணத்தை அதிகாரிகள் வாகனத்தில் வந்து வசூல் செய்ய வேண்டும் என்ற எங்களது 10 ஆண்டு கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்கள். டாஸ்மாக் பணியாளர்கள் மீதான இதுபோன்ற வன்முறை தாக்குதலில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயம் அடைந்துள்ளனர். சிலர் இறந்தும் இருக்கிறார்கள். எனவே டாஸ்மாக் கடையில் வசூலாகும் பணத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story