ஆட்டோவை வழிமறித்து டிரைவர் வெட்டிக் கொலை பயணிகள் அலறியடித்து ஓட்டம்
உசிலம்பட்டி அருகே கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில், ஆட்டோவை வழிமறித்து டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பி.கன்னியம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவர் பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த அக்கினி என்பவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடனை திரும்ப கேட்டு அக்கினி, அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதனால் ஆனந்தன் கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் சேடபட்டி போலீசார் விசாரித்து வந்தனராம். இதனால் 2 பேரின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அக்கினி மீண்டும் கடனை கேட்டு தொந்தரவு செய்ததால், ஆனந்தன் சேடபட்டி போலீசில் புகார் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அக்கினி மகன் பிரபாகரன் (23) நேற்று காலையில் ஆனந்தனை கொலை செய்ய பெருமாள்கோவில்பட்டி விலக்கு அருகே அரிவாளுடன் காத்திருந்தார்.
அப்போது கன்னியம்பட்டியிலிருந்து ஆனந்தன் வழக்கம் போல் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டு உசிலம்பட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஆட்டோ பெருமாள்கோவில்பட்டி விலக்கு அருகே வந்த போது, அங்கு காத்திருந்த பிரபாகரன் திடீரென்று ஆட்டோவை வழிமறித்து ஆனந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் ஆனந்தன் ஆட்டோவை விட்டு கீழே இறங்கி ஓடினார். ஆனால் அவரை பிரபாகரன் துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து சேடபட்டி போலீஸ்நிலையத்தில் அரிவாளுடன் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தின் போது ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தபடி ஆட்டோவை விட்டு இறங்கி ஓடினர்.
தகவலறிந்த பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆனந்தன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரின் உறவினர்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலினால் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story