காவலர் தேர்வில் முறைகேடு: அமைச்சு பணியாளர்கள், போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
மதுரையில் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சு பணியாளர்கள், போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதித்தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த தேர்வு பணியில் அமைச்சு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில் 4 தேர்வர்களின் மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வுக்குழு இன்ஸ்பெக்டரின் கையொப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் அதில், அந்த 4 பேரும் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்று தகுதி பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த 4 பேரும் தகுதித்தேர்வில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அங்கு பணியில் இருந்த அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் ஆகியோர் அந்த தேர்வர்கள் அனைத்து தகுதி தேர்வுகளிலும் பங்கேற்றதாக கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த 4 தேர்வர்களையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் காவலர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் ஆயுதப்படை காவலரின் உறவினர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமைச்சு பணியாளர்களும், ஆயுதப்படை போலீஸ்காரரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று அவர்கள் விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சு பணியாளர்கள் பாலமுருகன், முரளிதரன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் முருகேசன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட மற்றொரு அமைச்சு பணியாளரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :
Next Story