பாபநாசம் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
பாபநாசம்,
பாபநாசம் அருகே தென்கரை ஆலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சாமிநாதன் நேற்று காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மின் மோட்டாரை இயக்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மின் மோட்டார் இயங்கவில்லை. இதனால் அவர் மின்மோட்டாரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story