ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணியை நிறுத்தக்கோரி கதிராமங்கலத்தில் 30-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணியை நிறுத்தக்கோரி 30-வது நாளாக நேற்று பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாலங்காடு,
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடிநீர் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வு பணிக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் கசிந்தது. இதை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதைகண்டித்து கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் கதிராமங்கலம் மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம், காத்திருப்பு போன்ற பலவிதமான போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில் நேற்று முன்தினம் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் தர்மராஜன், ரமேஷ் இருவருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்குப்பதிவில் அவர்களது பெயர் தவறாக உள்ளதால் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று அய்யனார் கோவில் திடலில் 30-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி என்ற பெண் கூறுகையில், மக்களுக்காக போராடியவர்கள் மீது பொய் வழக்கு போட்டது தவறானது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு பணியை நிறுத்த வேண்டும். இதற்காக தான் போராடுகிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Related Tags :
Next Story