எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சி போட்டிகள் நடந்தன. போட்டிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி போட்டி நடத்தப்படுகிறது. கலை நிகழ்ச்சி போட்டியில் மாறுவேடம், நடனம், பாட்டு போன்றவைகளும், விளையாட்டு போட்டிகளில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவீந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கம் உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story