காளையார்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காளையார்கோவில்,
காளையார்கோவில் உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் காளையார்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் மலர்விழி, தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் அவரது உத்தரவின்பேரில் நேற்று காளையார்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் கல்யாண்குமார், தாசில்தார் சந்தானலட்சுமி, துணை தாசில்தார் சேதுமாதவன், நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சங்கரநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Related Tags :
Next Story