பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் முற்றுகை
தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை குரூப்பில் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது உஞ்சனை. இந்த குரூப்பில் உள்ள உஞ்சனை, சின்ன உஞ்சனை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு தொகையை பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி உஞ்சனை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்படவில்லை. இதனால் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று உஞ்சனை பகுதியை சேர்ந்த 283 விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் கணக்கெடுத்து 6 மாதங்கள் ஆகியும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
மேலும் பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், உஞ்சனை குரூப்பில் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்த 2 விவசாயிகளை வைத்து, மற்ற 281 விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து உஞ்சனை பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறும்போது, உஞ்சனை பகுதியில் 2 விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்ததை வைத்து, தண்ணீரின் விளைச்சல் காணாத மற்ற விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுக்கிறது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால் தான் இப்பகுதியில் விளைச்சல் இல்லை என்பது தெரியவரும். எனவே அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் சித்தானூர் குரூப்பில் உள்ள 131 விவசாயிகள் அனுமந்தக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
இவர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சித்தானூர் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story