மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 7 ஆயிரம் கன அடி தண்ணீர் பெட்டவாய்த்தலை வந்தடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 7 ஆயிரம் கன அடி தண்ணீர் பெட்டவாய்த்தலை வந்தடைந்தது. இன்று இரவுக்குள் முக்கொம்பு வந்து சேரும்.
திருச்சி,
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்தும் தண்ணீர் தர மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் குடிநீருக்கே மிகவும் சிரமப்பட்டு கொண்டு உள்ளனர். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வழக்கமாக ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு தண்ணீர் திறக்க வில்லை.
இதனால் விவசாயம் பொய்த்து போனது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவும் களை கட்டவில்லை. இந்த நிலையில் குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டது. பின்னர் 500 கனடியாக குறைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜேடர்பாளையம், மாயனூர் ஆகிய தடுப்பணைகளை தாண்டி நேற்று மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை வந்தடைந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவுக்குள் முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை காவிரிக்கரையோரம் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கையொட்டி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக காவிரி நீர் திருச்சி வந்தடையும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story