ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நொய்யல் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்,
நொய்யல் அருகே உள்ள புங்கோடையில் வேலாயுதம்பாளையம்-கொடுமுடி நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய பாலம் கட்டப்பட்டது. இந்த சாலை வழியாக கொடுமுடி, ஈரோடு, கோவை, பொள்ளாட்சி, திருப்பூர், க.பரமத்தி, பழனி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பரமத்திவேலூரிலிருந்து வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் கொடுமுடி, ஈரோடு, கோவை, பொள்ளாட்சி, திருப்பூர், க.பரமத்தி, பழனி, அரவக்குறிச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பரமத்திவேலூர் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. அதேபோல் பல்வேறு வகையான லாரிகள், வேன்கள், கார்கள் மற்றும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம் குறுகியதாக இருந்ததால் எதிரில் வரும் வாகனம் நின்று செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆமை வேகத்தில்...
அதேபோல் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இன்றி இருந்ததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் செய்த பிரசுரம் செய்யப்பட்டது. இதை அறிந்த கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து, குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு இரு வாகனங்கள் செல்லும் அளவிற்கு புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணியை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story