குப்பை லாரி மோதியதில் வாலிபர் தலை நசுங்கி பலி உறவினர்கள் சாலை மறியல்


குப்பை லாரி மோதியதில் வாலிபர் தலை நசுங்கி பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சாந்தோமில், மகளை பள்ளியில் விட்டு வந்தபோது குப்பை லாரி மோதியதில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.

சென்னை,

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தனது மகளை சாந்தோமில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார்சைக் கிளில் வீடு திரும்பினார்.

சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது பின்னால் வந்த குப்பை லாரி ராஜ்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜ்குமார் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பலியானார்.

இதுபற்றி அறிந்த ராஜ்குமாரின் உறவினர்கள் சாந்தோம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர் கள், இந்த சாலையில் தொடர் விபத்துகள் நடைபெறுவதை தடுப்புகள் அமைத்து தடுக்க வேண்டும் எனவும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் குப்பை லாரி டிரைவரான மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவநாத்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story