நடத்தையில் சந்தேகம் பெண் வெட்டிக்கொலை கணவருக்கு வலைவீச்சு
நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). இவர் மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு மகேந்திரன் (28), என்ற மகனும், சத்யா(25) என்ற மகளும் உள்ளனர். சத்யா திருமணமாகி கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சந்திரன், சரஸ்வதி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் ஒரே வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சரஸ்வதி கூடுவாஞ்சேரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். ஏற்கனவே தனது மனைவி மீது சந்தேகத்துடன் இருந்த சந்திரன் வீட்டுக்கு தாமதமாக வந்த காரணத்தை வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கணவன், மனைவி இடையே வாக்கு வாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தையில் சந்தேகப்பட்டு சரஸ்வதியை கத்தியால் வெட்டி படுகொலை செய்த அவரது கணவர் சந்திரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரும்பூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story