ரூ.3 கோடி தங்கம் கடத்திய வழக்கில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் கைது


ரூ.3 கோடி தங்கம் கடத்திய வழக்கில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 4:08 AM IST (Updated: 11 Aug 2017 4:08 AM IST)
t-max-icont-min-icon

லண்டனில் இருந்து ரூ.3 கோடி தங்கம் கடத்திய வழக்கில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவு அலுவலகத்தில் அண்மையில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது லண்டனில் இருந்து கூரியரில் எந்திர உதிரிபாகங்கள் என்ற பெயரில் தங்கம் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வரப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக முஸ்தபா என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது தந்தையும், தொழில் அதிபருமான யூசுப் கல்வா, முஷாபர் பவாஸ்கார் உள்பட 3 பேருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்தனர். யூசுப் கல்வாவும், அவரது மனைவி பரிடா என்பவரும் துபாயில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் விலை உயர்ந்த கைக்கெடிகாரங்களை கடத்த முயன்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்தநிலையில் தொழில் அதிபரான யூசுப் கல்வா தங்கம் கடத்தல் வழக்கில், மீண்டும் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story