ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் இயங்கிய 20 பள்ளி வேன்கள் பறிமுதல்


ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் இயங்கிய 20 பள்ளி வேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:10 AM IST (Updated: 11 Aug 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் இயங்கிய 20 பள்ளி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து இணை ஆணையர் ராமலிங்கம் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அதிக பயணிகளை ஏற்றி வந்த வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் மற்றும் வரி வசூல் மூலம் ரூ.3 லட்சத்து 600 பெறப்பட்டது.ஓட்டுனர் உரிமம் ரத்து

மேலும் அனுமதி இல்லாமல் மாணவர்களை ஏற்றி வந்த 20 பள்ளி வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 7 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய ஒருவர் மற்றும் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி வந்த 11 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.


Next Story