எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நட்புறவு கால்பந்து போட்டி


எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நட்புறவு கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 11 Aug 2017 4:13 AM IST (Updated: 11 Aug 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையேயான நட்புறவு கால்பந்து போட்டி நடந்தது.

மும்பை,

மராட்டிய மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு இடையேயான நட்புறவு கால்பந்து போட்டி நேற்று சட்டசபை வளாக மைதானத்தில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் அக்தகஸ் 11, சபாபதி 11 என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு இருந்தனர். இரு அணிகளிலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் இடம்பெற்று இருந்தனர். கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. சபாபதி அணிக்காக விளையாடினார். கால்பந்தை எட்டி உதைத்து போட்டியை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஆட்ட நேரம் முடியும் வரையிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ‘டை பிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அக்தஸ் அணி 3–2 என்ற கோல் கணக்கில் சபாபதி அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

சபாநாயகர் ஹரிபாவு பாக்டே, முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், எதிர்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண வி.கே.பாட்டீல், மந்திரி கிரிஷ் பாபட், முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான், முன்னாள் துணை முதல்–மந்திரி அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் தத்காரே உள்ளிட்ட தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தனர். மேலும் கால்பந்து விளையாடிய எம்.எல்.ஏ.க்களை உற்சாகப்படுத்தினர்.

Next Story