சென்டாக் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் 130 இடங்கள் காலியாக உள்ளன
புதுவையில் என்ஜினீயரிங் படிப்பிற்கான சென்டாக் கலந்தாய்வு 3–வது நாளாக நடந்தது. இதன் முடிவில் அரசு கல்லூரிகளில் மொத்தம் 130 இடங்கள் காலியாக உள்ளன.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் உள்ள 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் 16 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கலந்தாய்வு நேற்று 3–வது நாளாக நடந்தது. நேற்று நடந்த கலந்தாய்வில் 522 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 503 பேர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், விருப்பமான பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்தனர்.
அவர்களுக்கு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு சேர்க்கை ஆணைகளை வழங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) 4–வது நாளாக சென்டாக் கலந்தாய்வு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 980 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாட வாரியாக காலி இடங்கள் விவரம்3–வது நாள் முடிவில் காலியாக உள்ள இடங்களின் விவரம் வருமாறு:–
கல்லூரிகள் பாட பிரிவுகள் காலி இடங்கள்புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 1
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் 6
எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமெண்டேசன் 9
கம்ப்யூட்டர் சயின்ஸ் 4
தகவல் தொழில்நுட்பம் 7
கெமிக்கல் என்ஜினீயரிங் 12
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 4
சிவில் 6
காரைக்கால் பெருந்தலைவர்
காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரி
கம்ப்யூட்டர் சயின்ஸ் 30
தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) 35
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 16
அரசு பொறியியல் கல்லூரிகளில் 3–வது நாள் கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 130 இடங்கள் காலியாக உள்ளன. 16 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஸ்ரீ மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி, ஏனாம் ரீஜென்சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பின. மற்ற 14 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன.