ஏழைகளின் தேவதை!


ஏழைகளின் தேவதை!
x
தினத்தந்தி 12 Aug 2017 5:15 AM IST (Updated: 11 Aug 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

வாஷிங்டனில் வசிக்கிறார் 9 வயது ஹெய்லி. அன்பு உள்ளம் கொண்ட ஹெய்லி, 5 வயதிலேயே அசத்த ஆரம்பித்துவிட்டார்.

ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஆர்வத்தில் காய்கறி தோட்டங்களையும், பழவகை தோட்டங்களையும் வீட்டில் அமைத்தவர், அதில் விளையும் காய்கறிகளையும், பழவகைகளையும் ஏழைகளுக்கு வழங்க தொடங்கினார். தற்போது ஹெய்லியின் பார்வை, வீடுகள் இன்றி கஷ்டப்படும் ஏழை மக்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. 

அம்மா, தாத்தாவின் உதவியுடன் தானே மிகச் சிறிய மர வீட்டைக் கட்ட ஆரம்பித்திருக்கிறார். வெயிலும், குளிரும் தாக்காத வண்ணம் வீட்டின் கூரையை அமைத்து, ஜன்னல் கண்ணாடிகளைப் பொருத்துகிறார். தேவையான இடத்துக்கு நகர்த்திச் செல்லும் விதத்தில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒரு மனிதர் தங்கிக்கொள்ளலாம். சூரிய சக்தி மூலம் இந்த வீட்டுக்கு மின் இணைப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. வாரம் ஒரு வீட்டை உறவினர்களின் உதவியுடன் தயாரித்து. ஏழை மக்களுக்கு பரிசாக்கி வருகிறார். பொம்மை வீடுகளை வைத்து விளையாடும் வயதில்... ஏழைகளின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டிருக்கிறார், இந்த குட்டி தேவதை. 

Next Story