தாலுகா அலுவலகங்களில், இன்று பொது வினியோக திட்ட மனுநீதிநாள் முகாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் இன்று(சனிக்கிழமை) பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் இன்று(சனிக்கிழமை) பொது வினியோக திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
பொதுவினியோகம்மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டம் செம்மையாக நடைபெற, சிறப்பு மனுநீதி நாள் முகாம் பிரதி மாதம் 2–வது சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான (ஆகஸ்டு) பொது வினியோக திட்ட மனுநீதி நாள் முகாம் இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்க உள்ளது.
மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணிக்கு முகாம் நடக்கிறது. இந்த முகாமில், ஸ்மார்ட் கார்ட்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கார்டுகளை புதிதாக பெறுதல் போன்றவை குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.
மேற்பார்வையாளர்தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), கோவில்பட்டி மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும் மேற்பார்வை அலுவலர்களாக செயல்படுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.