ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவன் சாவு


ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Aug 2017 2:00 AM IST (Updated: 11 Aug 2017 7:41 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவர் மகன் மாரியப்பன் (வயது 45).

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவர் மகன் மாரியப்பன் (வயது 45). இவருடைய மனைவி செண்பகவள்ளி. இவர்களுடைய மகன் அழகுசெல்வம் (15). இவன், அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் அந்த பகுதியில் கன மழை பெய்தது. இதனால் மதியத்திற்கு பின்னர் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனால் அழகுசெல்வம் வீடு திரும்பினார். மழை ஓய்ந்த நிலையில், அன்று மாலை 4 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பரான 8–ம் வகுப்பு மாணவன் இசக்கிமுத்துவும்(13) அழகுசெல்வமும் பசுவந்தனையில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் உள்ள நாச்சியார் அம்மன் கோவில் அருகே விளையாட சென்றனர். அங்குள்ள ஓடை அருகே இருந்த இரும்பு குழாயை அவன் பிடித்துள்ளான். அந்த இரும்பு குழாயில் சுற்றப்பட்டிருந்த ஒயரில் இருந்த மின்சாரம் கசிந்திருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டான்.

அவனை ஓட்டப்பிடாரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story