தமிழக எல்லையில் தொடர் மழை: வீரண்ணமலை பகுதியில் புதிய நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக்க பொதுமக்கள் கோரிக்கை


தமிழக எல்லையில் தொடர் மழை: வீரண்ணமலை பகுதியில் புதிய நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2017 10:00 PM (Updated: 11 Aug 2017 5:13 PM)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தமிழக எல்லையில் தொடர்மழை எதிரொலியாக வீரண்ணமலை பகுதியில் புதிய நீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லை மலைப்பாங்கான பகுதியாக உள்ளது. இங்குள்ள வீரண்ணமலை பகுதியானது சென்னை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1, 300 அடி உயரத்தில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதிக்கு வாணியம்பாடி, தும்பேரி, வெலதிகாமணி பெண்டா, ஆர்மாணி பெண்டா வழியாக செல்லலாம்.

தற்போது வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகின்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக வரும் மழைநீர் பள்ளத்தாக்கு பகுதிகளை நோக்கி விழத்தொடங்கி உள்ளது. அந்த தண்ணீர் வீரண்ணமலையில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதனை பார்க்க ஏராளமானோர் ஆர்வத்துடன் செல்கின்றனர்.

இந்த காட்சியானது சினிமா படங்களில் போடப்படும் செட்டிங்ஸ் போல் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் ஆர்மாணிபெண்டா, தேவராஜபுரம், வெலதிகாமணிபெண்டா, அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வந்து பாலாற்றில் கலக்கிறது.

இந்த மலைப்பகுதியை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story