கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேர் விடுதலை: குழந்தைகளின் பெற்றோர் கண்டனம்
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து உள்ள குழந்தைகளின் பெற்றோர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. இங்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி பயங்கர தீ விபத்து நடந்தது. இந்த கோர சம்பவத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை கோர்ட்டு, பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பள்ளி தாளாளர் சரஸ்வதி உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், கட்டிட பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை தஞ்சை கோர்ட்டு வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. அதேபோல தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி நிறுவனர் உள்பட 10 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதனிடையே தண்டனை பெற்று சிறையில் இருந்த பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டார்.
மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சென்னை ஐகோர்ட்டில் நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. அதில் பள்ளி நிறுவனர் பழனிசாமியின் தண்டனை காலத்தை குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐகோர்ட்டடின் தீர்ப்புக்கு குழந்தைகளின் பெற்றோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர் நேற்று கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகளின் நினைவிடத்தில் ஒன்று கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளி தீ விபத்தில் நாங்கள் எங்களுடையை குழந்தைகளை இழந்ததோடு இல்லாமல், மன வேதனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கில் தஞ்சாவூர் கோர்ட்டு 11 பேரை விடுதலை செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆகவே குழந்தைகளை இழந்த எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.
தீயில் கருகி இறந்த எங்களுடைய குழந்தைகள் எல்லாம் தியாகிகள். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலாவது நீதி வழங்கி இருக்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக தீ விபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் மலர் தூவியும், தீ விபத்து நடந்த பள்ளி முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தியும் அவர்களின் பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story