வேதாரண்யத்தில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு


வேதாரண்யத்தில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 4:00 AM IST (Updated: 12 Aug 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

இங்கிருந்து ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப் படும். ஜனவரியில் தொடங்கிய உப்பு உற்பத்தி, கடும் வெயிலின் காரணமாக அதிகஅளவில் நடைபெற்று வந்தது. இதனால் ஒரு டன் உப்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதாரண்யத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வேதாரண்யம், கோடியக்காடு, கடினல்வயல், அகஸ்தியன்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. பலத்த மழையினால் இந்த பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருப்பு வைத்திருந்த உப்பு பெருமளவில் கரைந்து சேதம் ஏற்படாமல் இருக்க தார்பாய் மற்றும் பனை மட்டைகளை கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். மழைநீர் வடிந்து உப்பு உற்பத்தி தொடங்க இன்னும் 10 நாட்கள் ஆகும் எனவும், மழையினால் உப்பு விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Next Story