தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட தலைவர் இரா.சுந்தரராஜு தலைமை தாங்கினார். இதில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நெல்லையப்பன், மாநகர் மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜெயராஜ், இணை செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞர் அணி பொறுப்பாளர் சங்கர் உள்பட பலர் கட்சி கொடிகளை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
முன்னதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வில் மத்திய பாடதிட்டமான சி.பி.எஸ்.இ. மூலம் படித்தவர்கள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் வெற்றி பெற முடியாது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறார்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது. எனவே ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story