வீரணம்பட்டி, தரகம்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீரணம்பட்டி, தரகம்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரகம்பட்டி,
மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீரணம்பட்டியில் திருச்சி- பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தற்காலிகமாக வீரணம்பட்டி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு சரி செய்யப்பட்டு நிரந்தரமாக குடிநீர் வழங்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- பாளையம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இதேபோல் தேவர்மலை ஊராட்சி குடிவண்டையில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தரகம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மீண்டும் குடிநீர் வழங்கக்கோரி தரகம்பட்டியில் கரூர்- மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முருகன், கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி உலகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் 2 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story