காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புதுவை அரசுக்கு ரூ.3 கோடி வருவாய்
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புதுவை அரசுக்கு ரூ.3 கோடி வருவாய் முதல்–அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார்
புதுச்சேரி,
புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வருவாயாக ரூ.3 கோடியே 14 லட்சத்திற்கான காசோலையை புதுவை அரசுக்கு வழங்கியது. இதற்கான நிகழ்ச்சி நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அறையில் நடந்தது.
நிகழ்ச்சியில் தனியார் துறைமுகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜி.ஆர்.கே. ரெட்டி கலந்து கொண்டு ரூ.3 கோடியே 14 லட்சத்திற்கான காசோலையை முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசுத்துறை செயலாளர் மிகிர்வர்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story