பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் (சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்) இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 9.38 மணி முதல் பிற்கல் 2.54 மணி வரை மாட்டுங்காவில் இருந்து ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
இந்த ரெயில்கள் சயான்– முல்லுண்டு இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். பின்னர் முல்லுண்டில் இருந்து மீண்டும் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.46 மணி முதல் பிற்பகல் 3.18 மணி வரை முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று வரும்.
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.– சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை 11.40 மணி முதல் மாலை 4.40 மணி வரையும், சுன்னாப்பட்டி, பாந்திரா– சி.எஸ்.எம்.டி. இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் பராமரிப்பு பணி நடக்கிறது.இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 11.21 மணி முதல் மாலை 4.39 மணி வரையும், பாந்திரா, அந்தேரி செல்லும் ரெயில்கள் காலை 10.38 மணி முதல் மாலை 4.43 மணிவரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு வரும் ரெயில்கள் காலை 9.52 மணி முதல் பிற்பகல் 3.26 மணி வரையும், பாந்திரா, அந்தேரியில் இருந்து வரும் ரெயில்கள் காலை 10.44 மணி முதல் மாலை 4.13 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் பராமரிப்பு பணியின் போது பன்வெல்– குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.