இரவு நேரத்தில் மெட்ரோ கட்டுமான பணிகளை தொடர கூடாது


இரவு நேரத்தில் மெட்ரோ கட்டுமான பணிகளை தொடர கூடாது
x
தினத்தந்தி 11 Aug 2017 10:07 PM GMT (Updated: 2017-08-12T03:37:08+05:30)

3–ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தையொட்டி மும்பையில் கொலபா– பாந்திரா– சீப்ஸ் இடையே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

மும்பை,

3–ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தையொட்டி மும்பையில் கொலபா– பாந்திரா– சீப்ஸ் இடையே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ திட்டத்தையொட்டி, இரவு நேரங்களில் கட்டுமான பணி தொடர்வதால் பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாக கூறி தென்மும்பையை சேர்ந்த வக்கீல் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வார காலத்துக்கு இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை வரை மெட்ரோ கட்டுமான பணியை தொடர கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் நிலைப்பாட்டை விளக்கம் வேண்டும் என்றும் கூறினர்.


Next Story