மாநில நெடுஞ்சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிப்பு
கர்நாடக பொதுப்பணி துறை மந்திரி மகாதேவப்பா சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கொள்ளேகால்,
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகள் ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த பா.ஜனதா ஆட்சி காலத்தில் வெறும் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மட்டும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் அந்த சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் டவுன் புவனேஸ்வரி சர்க்கிளில் இருந்து ராமசமுத்திரா வரை உள்ள இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. ஆம்புலன்ஸ், அரசியல் தலைவர்கள் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் இருக்க இந்த 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story