வேற்றுக்கிரகவாசிகள்: விஞ்ஞானியின் ‘பகீர்’ எச்சரிக்கை
நம்மைப் போன்ற வேற்றுக்கிரகவாசிகளை அறிவதற்கான சுவாரசியத் தேடல் தொடர்ந்தபடி இருக்கிறது.
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார்,
அதாவது, வேற்றுக்கிரகவாசிகளும் நம்மைப் போன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்றும் ஹாக்கிங் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் ‘கிளஸ் 832சி’ என்ற கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுக்கிரகவாசிகள் இருக்கக்கூடும் என்று கருதப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹாக்கிங் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத் திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “நிச்சயமாக ஒரு நாள் வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சமிக்ஞை வரும். ஆனால் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. வேற்றுக்கிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய அழிவைத் தவிர்க்க முடியும்.
அவர்களும் நம்மைப் போன்றுதான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள். எனவே அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம்.
ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தொடர்பு கொண்டால், மனித இனமே பூண்டோடு அழிய நேரிடலாம் என்று திகில் கிளப்புகிறார், ஸ்டீபன் ஹாக்கிங்.
ஹாலிவுட்காரர்கள் இதையும் பிரம்மாண்ட படமாக எடுக்கமாட்டார்களா என்ன?
Related Tags :
Next Story