ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்


ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து விடுதலை பெறும் வாரம் என்ற தலைப்பில் வருகிற 15–ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திறந்தவெளி மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தனிநபர் இல்ல கழிப்பறைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ–மாணவிகள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். முடிவில் திறந்த வெளி கழிப்பிட பழக்கத்தை அகற்றுவதற்காக மாணவ–மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Next Story